முதலில் ஒரு பாத்திரத்தை கழுவி,அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு 1 ஸ்பூன்,உப்பு 1ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து பாதாம்,முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதைத்தொடர்ந்து, ஊறவைத்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் வரை வேகவைக்கவும்
அதன்பின் குக்கரைத் திறந்து, அதில் அரைத்த கலவை, தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
பின் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம் , பச்சைமிளகாய் 7 சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறவும்.மட்டன் வேகவைத்த தண்ணீரையே 1 கப் அரிசிக்கு 1 ½ கப் என்கின்ற அளவுக்கு ஊற்றவும்.
பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து , கொதி வந்தவுடன் , அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்து , 90 சதவீதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடியிட்டு , 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கினால் , கொங்குநாட்டு வெள்ளை மட்டன் பிரியாணி கமகம மணத்துடன் உங்களைச் சாப்பிட அழைக்கும்.