ஒரு வாணலியில் நெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 2 குவளை தண்ணீர் ஊற்றி, கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.அதோடு மஞ்சள் தூள்,இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.
பின்னர் தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.இறுதியாக, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் தாளிக்க கடாய் வைத்து,நெய் ஊற்றி,கடுகு,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து பின் அதை அந்த கலவையில் கொட்டுங்கள்.இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியம் தரும்,சளி,இருமல் துரத்தும் தூதுவளை ரசம் தயார்.