நன்னாரி வேரை முதல்நாள் இரவே பொடியாக நறுக்கி கழுவி சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலையில் மாம்பழம்,மாதுளை,அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி நறுக்கி மிக்சியில் அடித்து வடிகட்டவும்.
அந்தச் சாறுடன் ஆரஞ்சு,தர்ப்பூசணி,எலுமிச்சைச் சாறைக் கலக்கவும்.போதிய அளவு சர்க்கரை,சிறிது உப்பு போடவும்.
கொஞ்சம் புதினா,துளசி இலையை நறுக்கி போடுங்கள்.நன்னாரி ஊற வைத்த தண்ணீரை அதில் ஊற்றி நன்கு கலக்குங்கள்.
இந்த பழரச பானம் புதுமணமும்,சுவையும் நிறைந்தது.கோடை வெயிலுக்கு குளுகுளுவென இருக்கும்.குளிர்ச்சி தேவைப்பட்டால் ஐஸ் போட்டுக் குடிக்கலாம்.