முதலில் ஒரு வாணலியில் உளுந்தை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.அதை ஒரு மிக்சி ஜாரில் இட்டு நன்கு அரைத்து எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்
பின்னர் அதே வாணலியில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரியைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
நெய்யில் முந்திரியை வறுத்த வாணலியில் தண்ணீர் ஊற்றி,அது கொதிக்கும்போது, அரைத்து வைத்திருந்த உளுந்து பொடியை சேர்த்து கட்டியில்லாமல் கலக்குங்கள்.
பின்னர் சர்க்கரை சேர்த்து,இடைவிடாமல் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து நன்கு கிளறுங்கள்.தொடர்ந்து அதில் ஏலக்காய் தூள்,வறுத்த முந்திரி சேருங்கள்.
இடைவிடாது கிளறி,அல்வா பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து வாணலியை இறக்கிவிடுங்கள்.மணமான உளுந்து அல்வா ரெடி!